Tuesday, 11 July 2017

அவ்வார்த்தைகள்

sad love failure girl modern painting க்கான பட முடிவு

சூறைக் காற்றின் வனத்தில் 
அசையாமல் நிற்கின்றது அவ்வார்த்தைகள், 
தேகம் உப்புக் கரித்து உதிரத் தொடங்க, 
வண்ணத்துப் பூச்சிகள் மொய்க்கின்றன 
உதிரம் குடிக்க... 
இதழ் பறித்து இதழ் குடித்த இதழா உதிர்த்தது 
அசையாத அவ்வார்த்தைகளை? 
நீ பறித்த அவ்விதழை வீசியெறிகிறேன்... 
அவ்வார்த்தைகள் அசையாமல் 
இன்னமும் அப்படியேதான் நிற்கின்றன, 
புறம் பேசும் பூக்களுக்கெல்லாம் என்ன தெரியும் 
நானும் தேனளித்த ஒரு பூ தானென்று, 
உதிர்ந்து விழுந்த பூவொன்று உங்களுக்காக 
அவ்வார்த்தைகளை அப்படியே விட்டுச் செல்கிறது... 
நீங்களாவது 
அடிக்கடி படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts