Monday, 3 July 2017

ஆசைகள் அதிகம்

Image may contain: one or more people

கண்சிமிட்டும் கண நேரத்தில்
காட்சிகள் இடம் பிறழ்ந்து
நிகழ்காலத்தைச் சாகடித்த எதிர்காலம்
நிகழ்க் காலமாய் மாறி
அடுத்தக் கண் சிமிட்டலில்
இறந்த காலத்திற்குள் நுழையும்
மாயைக்குள் மூச்சுக் காற்றைச் சுமந்து
எதிர்காலத்தின் விடயங்களை
எடுத்துச் சொல்லும் தேகச் சுமையாளிக்கு
ஆசைகள் சற்று அதிகம்தான்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts