
வசீகரனைக் காணவில்லையென
ஆடுகள் தேடிக் கொண்டிருந்தன,
ஓநாய்கள் இழுத்துச் சென்றிருக்குமோ
என்ற கவலை அவற்றிற்கு...
ஆண்டை மட்டும்
அவனைப் பற்றிக் கவலைப் படவில்லை
புதிதாய் ஓர் ஆயன்
திரட்டிக் கோலோடு மறித்துக் கொண்டிருந்தான்,
முரண்ட ஆடுகளை
மிலாற்றால் விளாசினான்...
வரண்டவிடத்தில் மேய்ச்சலுக்கு விட்டான்
அங்குதான் அவன் படுத்துறங்க
புளியமரமொன்று தோதாக இருந்தது,
எழுந்து பார்த்தபோது
ஆடுகளைக் காணவில்லை....
வசீகரனைக் காணவில்லையென
ஆடுகள் தேடிக் கொண்டிருந்தன...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment