Tuesday, 20 June 2017

நீ என்னை...

Image result for one side love in girl

நான் என்னைத் தேடுகிறேன்... 
களவாடியவன் நீயென்பது 
எனக்கு நன்றாகவே தெரியும், 
என்னைத் தொலைத்த பிறகுதான் 
உணர்ந்தேன், 
நீ அழகின் ஆதிக்கமென்று, 
குளிர்ந்தக் காற்றில் 
உன் இதழை ஸ்பரிசிக்கிறேன் 
நீ மழையெனப் பொழிகிறாய், 
கண்களில் மின்னலை வைத்திருக்கிறாய் 
எப்படி நான் பார்ப்பது ? 
கோதிவிடும் உன் விரல்களுக்காகவே 
அலையும் முடிக் கற்றையை 
அப்படியே விட்டு வைத்திருக்கிறேன், 
வறண்டு போன கற்பனையை 
வடிவாக்கியே வரமாக்கியவன் நீ, 
வாசலில் நீ வராவிட்டாலும் 
அடிக்கடி நான் வந்து நிற்கிறேன், 
சன்னல் கதவுகளைக் கழற்றி விட்டேன் 
கண்களில் 
படாமல் போகக் கூடாதென்பதற்காக.. 
ஆனாலும் ஒரு சந்தேகம் 
நீ என்னைக் காதலிக்கிறாய்த் தானே ?

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts