முதலில் கண்களை
மெல்ல மூட வேண்டும்...
காற்றை மெதுவாக உள்ளிழுத்து
நெற்றிக் கண்ணில்
நிலை நிறுத்த வேண்டும்...
வெறுமையாய்த் தெரியும்
வெண்மேகக் கூட்டத்தில்
இப்போது நீ நடப்பாய்...
உன்னையே
நீ தொடர்ந்து போ...ம்...போ...
உருளுமோர்ச் சப்தம் வயிற்றில்
மெல்லியதாய்க் கேட்கும்...!
மார்பின் துடிப்பு
அதிகத்தில் அதிகமாய்த் துடிக்கும்...!
மூச்சை மெதுவாய் வெளிவிடு...
கண்களைத் திறந்துப் பார்
இப்போது
ஞானத்தின் வாசல் திறந்திருக்கும்!
.
நானும் அப்படிதான் செய்தேன்...
வாசலில் முகம் காட்டி நிற்கிறான்
கடன் கொடுத்த பூச்சாண்டி!
ஞானத்தின் வாசலை
நானெங்கே காண்பது ?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment