இருட்டிலொருவன்
வெளிச்சத்தைத் தேடிக் கொண்டிருந்தான்,
வெளிச்சத்திலொருவன்
இருட்டை தேடிக் கொண்டிருக்கிறான்,
நடக்க மறந்த ஒருவன்
பாதைகளைப் பழிச் சொல்லிக் கொண்டிருக்க
ரசிக்க மறந்தவன்
பூக்களைச் சிதைத்துக் கொண்டிருந்தான்
ஆலயங்களில் பாவங்கள்
வரிசைக் கட்டி நிற்கின்றன
கறுப்புச் சட்டைகளின் நிறம் வெள்ளையென்று
அரசியல்வாதிகள் சொல்கிறார்கள்
உறங்கியவிடத்திலிருந்து விழித்துப் பார்த்தால்
உலகம் மட்டும் அப்படியேதான் இருக்கிறது
நிலம் மட்டும் ஏனோ
கீழே நழுவி நகர்ந்து கிடந்தது .
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment