
அவன் அறிவாளியாம்
அவன் தான் அப்படிச்
சொல்லிக் கொள்கிறான்!
அவனைச் சுற்றி எப்போதும்
ஒரு கூட்டம் உண்டு!
ஆஹா! ஓஹோ! யென்றே
எப்போதும் துதிப் பாடும்!
உலகமே தன் பின்னால்
உருண்டு வருவதாய்
கற்பனைக் கொள்வான்!
ஆனாலும்
அவன் மனைவி சொல்கிறாள்
முட்டாளுக்கு
தான் வாழ்க்கைப் பட்டதாய்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment