
இலாஞ்சனை நன்றாக வருகிறது...
வராத சிரிப்பைதான்
வரவழைத்து நிற்கிறாள்!
பூத்தளிர்த்த நாட்களில்
நினைக்கவில்லை...
பூக்களோடு பூக்களாய்
தானும் விற்பனைக்கென்று!
எச்சில் மழையில்
நாற்றமெடுத்த பூ!
கள்ளச் சிரிப்பர்களின்
காமக் கழிவறை!
தொலைத்துகட்ட நினைக்கிறாள்
தொடரச் சொல்கிறது வயிறு!
விதை வைக்க மனமில்லை
எல்லாமே கள்ளிச் செடிகள்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment