
அடவியின் பெருவெளியில்
சருவுகளும் இலைகளும்
காற்றிடம் பேசிக் கலக்க
செதிளிறகிகளின்
பரத்த வண்ணத்துகள்களில்
மலர்களின் வாசம்
உயிரிகளுக்கும் உணர்வூட்ட
மந்திகளும் தாவித்திரிய
கனிகளும் அணில் கடித்து
வீழ்ந்துக் கிடக்க
பிரண்டி நக்கித் திரியும்
அகவான்களை விழுங்கப் பதுங்கும்
அகடூரிகளும் பதுங்கி நகரும்
கழுகின் கண்பார்வையும்
வனத்தை அழித்த வல்லூறுகள்
அறிவதில்லை!
ஆலைகளின் புகைக்குள் வாழ்ந்து
நோய்ஞ்சல் சூடும்
அந்திமப் பிறவிகள்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment