Tuesday, 20 June 2017

ஈகையும் கடனே

Image may contain: one or more people

கொடுக்கும் கைகளைவிட 
வாங்கும் கைகளுக்குதான் 
வலிகளதிகம்! 
நெஞ்சத்தின் ஈரக்குலைகளை 
வெட்கம் பிடுங்கித் திண்ணும்! 
இன்னமொரு பிறப்பாய் 
உயிர் செத்து யெழும்! 
வாழுகின்ற வாழ்க்கையை 
வாய்மொழிகள் நிந்திக்கும்! 
சாவு வராதாயென்று 
சற்றே நினைத்துப் பார்க்கும்! 
இத்தனை அவதியும் சிலருக்கு 
வேடிக்கையாய்த் தெரியும்! 
சற்றே அவர்கள் நிலையறிந்து 
ஈவதும் நம் கடமைதானே! 
ஈகையைக் கொண்டாடுங்கள் 
இல்லாமையை விரட்டிவிட! 
சக்காத்தும் கடமைதான் 
தக்காமல் கொடுத்திடுங்கள்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts