Wednesday, 14 June 2017

பொடிச்சி

Image may contain: twilight and outdoor

குட்டப் பாவடைப் பொடிச்சி 
யொருத்தி டப்பாங்கடிச்சிச் சுத்துறா! 
அங்கனை யொருத்தி ஆதார மில்லாம 
கயித்தின் மேலே நடக்கிறா! 
மேளமடிக்கும் வயசுப் பொண்ணு 
மாராப்பை மூடாமச் சிரிக்கிறா! 
வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்திற்கு 
அவ வெல்லக் கட்டியா யினிக்கிறா! 
அத்தனையும் பார்த்த அப்பங்காரன் 
கேவலம் காசுக்குச் சுத்துறான்! 
வித்தைக் காட்டி உழைச்சப் பொழப்புக்கு 
சொத்தைக் காசும் கிடைக்கல! 
பெத்தப் பொண்ணை ஒதுங்கழச்சவன் 
இன்னமும் அங்கேயே நிக்கிறான்! 
நாண்டுச்சாவ வழியில்லாமதான் 
அவளும் பல்லை யிளிக்கிறா! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts