Saturday, 17 June 2017

அன்புள்ள பெயரா!


Related image

அன்புள்ள பெயரனுக்கு,
தாத்தா எழுதுவது...!

நான் தொலைத்ததை
நீ தேடிப் பார்..
அது உனக்கு
பொக்கிஷமாக இருக்கலாம்!

அகந்தையின் தயவில்
தாயன்பை 
தொலைத்திருக்கிறேன்!

கர்வத்தின் போதையில்
உறவுகளைத் 
தொலைத்திருக்கிறேன்!

பணத்தின் திமிறில்
நட்புகளைத்
தொலைத்திருக்கிறேன்!

தகாத பழக்கத்தால்
வாழ்க்கையைத்
தொலைத்திருக்கிறேன்!

தொலைத்ததை
பிறிது நாளில்தேடியபோது
அது எனக்கு
கிடைக்கவே யில்லை!

நீயாவது தேடிப் பார்,
நான் 
தொலைத்தவை யெல்லாம்
உனக்கு
பொக்கிஷமாக இருக்கலாம்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts