உதிர்ந்த இறகுகளை
கூடுகளில் வைத்து
குருவிகள் அழுவதில்லை,
இறகுகளின் பந்தம்
இத்துடன் முடிந்து விட்டது,
காது குடைபவனுக்கு
சுகமாகிச் சுகம் தரலாம்,
சித்திரகாரன் கை வனப்பில்
பறவையாகிப் பறக்காமல்
அங்கேயே நிற்கலாம்,
சிற்றுயிர்களின்
நிழற் குடையாய் இடம் மாறி
இதம் தரலாம்,
உதிர்ந்த ------------------ ளை
-------------------------ல் வைத்து
----------------------ஏன் அழ வேண்டும்?
கோடிட்ட இடங்களை, இனி
நீங்கள்தான்
நிரப்பிக் கொள்ள வேண்டும்.
-மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment