Saturday, 17 June 2017

கடவுள்? !

Image result for பிச்சை

கடவுள் இல்லை...
இல்லவே இல்லை!

ஆமாம் துரை!
கடவுள் இல்லை!
இருந்திருந்தா நான்
இப்படி யிருப்பேனா?
ஏதாவது தர்மம் செய்யுங்க!

கடவுள் இருக்கிறார்
அவரே அன்பானவரும்!

ஆமாம் சாமி
கடவுள் உங்களை
கைவிடமாட்டார்
பசிக்குது சாமி
தர்மம் செய்யுங்க!

ச்சேய்!
பிச்சைக்காரங்க தொல்லை
அதிகமா போச்சி!
வா நண்பா, நாம
அந்த பக்கம் போவோம்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts