Wednesday, 21 June 2017

நல்ல அப்பா ?

Image result for bad dad

நான் என் பிள்ளைகளுக்கு
அப்பாவாக இருக்கிறேன்...
நான் நல்ல அப்பாவா யென்று
என் பிள்ளைகள்தான் 
சொல்ல வேண்டும்!

குடித்துவிட்டு வரும் 
அப்பாக்களை;பிள்ளைகள்
குஷ்டரோகிப் போல்தான்
பார்க்கிறார்கள்!

கைச் செலவிற்கு
காசுக் கொடுக்கும் போது
புன்னகையைச்
சேர்த்துக் கொடுங்கள்!
காசு செலவழிந்தாலும்
புன்னகை மிச்சமிருக்கும்!

பிள்ளைகளை
அடிக்கும் போது
உங்களுக்கு வலித்தால்
நீங்கள்
நல்ல அப்பாதான்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts