எலும்புத் துண்டங்கள் இறைந்தவிடத்தில்
ஓநாய்களின் கால்தடங்கள் வழி காட்ட
ஆயன் அலைகின்றான்
தன் ப்ரிய ஆட்டைத் தேடிக் கொண்டு,
சொக்காச்சி...சொக்காச்சியென்றே
சொக்காச்சியும் அவனோடுதான்
ஆடு மேய்ப்பவள்,
கல்மிசமில்லாக் கலகலச் சிரிப்புக்காரி,
கவுந்துப் போனவன் ஆயன்
அவள் ஆண்டைவிட்டுப் பழங்கஞ்சியும்
அவள் கைக்கொண்டுதான் மணக்கும்
உறுகாய்க்குப் பதில்
அவள் விரலைத்தான் நக்கிக் கொள்வான்...
மலைக்காட்டோரம் போனவளை
அம்மணமாகத்தான் பார்த்தான்...
குறிக் கொழுத்த ஓநாய்கள்
அவளைக் குதறிவிட்டுப் போயிருந்தன..
எரித்தவிடத்தில் எலும்பொன்றைக் களவி
கழுத்துக் கயிற்றில் ஆவணமாய்
கோர்த்து வைத்துக் கொண்டான் ...
அவள் பெயர்தான் அவன் ப்ரிய ஆட்டுக்கும்,
இதையாவது ஓநாய்கள் விட்டு வைத்திருக்காதா?
கண்ணீரோடுவே அலைகின்றான்
'சொக்காச்சி...சொக்காச்சி...'
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment