Wednesday, 14 June 2017

இதழ் இதழாய்

Image result for beauty lips morden painting

தட்டச்சும் என் விரல்களில் 
மதுவின் ரசம் வழிகிறது, 
கவிதைத் தன் திலகத்தை 
குறுக்குவாட்டில் வைத்துக் கொண்டது, 
மூச்சுக் காற்றில் தளிராடும் 
துளிர் இலைகளிரண்டு 
முகத்தில் எப்படி ஒட்டிக் கொண்டது? 
எள்ளுச் செடிக்கு 
இத்தனையழகுத் தொட்டியா ? 
இரண்டு நட்சத்திரங்களின் 
தொட்டிலாய் இளம் பிறையொன்று, 
கரடியொன்றுக் கவ்வக் 
காத்திருக்கிறது தேனடையை, 
யார் வரைந்த ஓவியமிது? 
முத்துமாலைகளைப் பாதுகாக்க 
பவழப் பெட்டகமா? 
காதலர்களின் காந்தச் சிறைக்கு 
சிகப்பு வண்ண வாசல், 
இதழ் இதழாய் உதிர்ந்தக் கவிதைகளை 
இணைத்து வைத்தேன், 
விரல்களில் ஒட்டிக் கொண்டது 
சிகப்பு வண்ணம்... 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts