
நீயென்னைப் பார்க்க வர வேண்டாம்...
என் வார்த்தைகள்
உன்னையே சுற்றிச் சுற்றி வருகின்றன,
உன் மௌனத்தை
என் வார்த்தைகளால் மொழி பெயர்க்க முடியும்,
நீயென்னைப் பார்க்காவிட்டாலென்ன ?
என்னிதயன்
உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்,
உன்னைத் தொட்டுச் செல்லும் காற்று
அவன் கவிதைகளையும் சுமந்துதான்
உன்னைத் தழுவி போகிறது....
உன் சிணுங்கலில் பதுங்கிச் செல்லும்
பட்டாம் பூச்சியின் சிறகுகளில்
அவனது காதல் வண்ணம் ஒட்டிக் கொண்டிருக்கிறது...
நீ பார்க்காவிட்டாலென்ன ?
என்னிதயன்
உன்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான்,
கனவுகளின் தேசத்தில் மட்டும் நுழைந்துவிடாதே...
அவனுக்கு அங்கே
அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment