
அவளொரு கதைச் சொல்லி
அவளைச் சுற்றி எப்போதும்
பிள்ளைகள் கூட்டம்!
எந்தக் கதைத் தொடங்கினாலும்
பாட்டி ஏமாந்தக் கதைதான்
முதலில் சொல்வாள்!
பிள்ளைகளிடம் தன் பாட்டி
ஏமாந்தப் பதிவிற்காய்ப் பிறக்கும்!
பிரித்திவியின் கதைச் சொல்ல
ரொம்பவே பிடிக்கும்!
கன்னிமை நிலையில் காத்திருக்கும்
அவலம்
அவளுக்கு மட்டுமே புரியும்!
மனவிக்கு ஈரல் கேட்ட
மகனின் கதையும் அவளின் விருப்பம்...
பெற்றுபோட்டு ஓடிப் போன
அம்மாதான் நினைவிற்கு வருவாள்!
அப்பா கதைகள்
அவள் சொல்வதே யில்லை
குடித்துவிட்டு வந்து
பக்கத்தில் படுத்தவனை
எப்படிப் பெருமையாய்ச் சொல்வது?
கதைகளுக்குள்ளேயே வாழும்
அவள் மட்டும் தான் அறிவாள்...
ஒவ்வொரு கதைக்குள்ளும்
யாராவது ஒளிந்திருப்பது!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment