
மிகைத்த வெளியில்
மிதக்கும் நிலவா - அன்றி
பசித்த வயிற்றில் விழுந்த
சோற்றுப் பருக்கையா ?
கொழுத்த காமம் மிகைத்த
பொதுவின் மகளா ? -அன்றி
மிகுத்த முகிழ் காதல்
வழித்த கவிதையின் அழகா?
விசித்த கச்சையில்
பசித்த திமிர் முலையா ? - அன்றி
நொடித்த வாழ்வில்
ஒடுங்கி வீழும் நொம்பலமா ?
கசக்கிப் போடும் கவிஞன்
குப்பைக் காகிதப் பொதியா ?
அன்றி ஏழையின் பசியினில்
ஒடுங்கின பாழ் வயிறா ?
நிலவே நீ யாரென்றுச் சொல் ...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment