
உதரத்தில் ஒலியெழிப்பி
அதரத்தில் வறட்சிக் கூட்டி
கட்புலம் திரை மறைக்கும்...
பசியெனும் கொடுமரக்கன்...
நோயுடைக் கொண்டழிந்துச் சிதற
பசித்துப் புசிக்கும்
பசியறி நோன்பு நோற்றாலிகளே...
விதித்தவன் விதித்த விகிதத்தில்
கொடுத்திடும் கொடையும்
கடுமாயுதமாய் மாறும்...
பசி நரகன் பாதளத்தில் வீழ்ந்திடவே!
- மு.முகமது பட்சா
No comments:
Post a Comment