Wednesday, 7 June 2017

கல்லின் கதை

Image may contain: one or more people

கல்லுக்கு உயிரில்லை 
அஃது எப்போதே மரணித்துக் கிடந்தது! 
சிற்பியின் விரல்களில் 
வித்தை நுழைந்து 
விரவுகிறது உளிகள்! 
செத்துதலில் தெரிக்கும் துளிகள் 
அனாதைகளாக அகன்றுக் கிடக்க 
ஒற்றை யுருவம் 
உயிர்பெற் றெழுகிறது! 
சிற்பியின் கதை இத்துடம் முடிய.. 
சிலையின் கதைத் தொடர்ந்தெழுதும் 
இருப்பிடம் கண்டு.... 
இனி 
கும்பிடுவதும்! குதுகலிப்பதும்! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts