Saturday, 17 June 2017

பிணக்கு

Image result for sad lovers painting

கொண்டை ஊசி வளைவுகளில் 
சாய்ந்தாடுகிறோம் 
நீயும் நானும் 
சாய்வு விதிகளுக்கு மாற்றமாக! 
நீ அந்தப் பக்க 
பசுமைகளை இரசிக்கிறாய்! 
நான் இந்தப் பக்க 
பசுமைகளை இரசிக்கிறேன்! 
மேகம் பேரூந்திற்குள் நுழைந்து 
கண்களை மறைக்கும் போது 
கண்களைத் தேடுகிறோம்... 
கண்ணாமூச்சி விளையாட்டாய்! 
யாரோ நம்மைப் பார்க்கிறார்கள்! 
மெளனத்தை 
சிதைத்துவிட்டுப் பேசுவோம் 
கணவன் மனைவியாக! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts