
தொழுகையின் ஞானமும்
தூய்மையின் சிந்தனையாய்
சூபிக் கிழவன் உட்கார்ந்திருக்கிறார்,
ஞானத்தின் வாசல்
திறந்திருக்கிறதா எனக் கேட்டேன்..
உனக்கும் கூட அது
காத்திருக்கிறதென்றார்,
எப்படி என்றேன்,
இப்போதுதான் நீ
கேள்விகளைக் கேட்கத்
தொடங்கிவிட்டாயே, என்றார்...
அருகிலிருந்த விளக்கை ஏற்றினார்
வெளிச்சம் பரவியது
வெளிச்சம்
எங்கிருந்து வருகிறது எனக் கேட்டேன்
அதை அணைத்து விட்ட கிழவர்
அஃது இப்போது
எங்கே போனதென்று கேட்டார்...
என்ன சொல்வேன்...
முகத்தில் விளைந்த
குழப்பத்தைப் பார்த்தவர்
கேள்விகளைக் கொண்டே விளக்கேற்று
நிச்சயம் வெளிச்சம் வரும் என்றார்....
அவர் அணைத்த விளக்கை ஏற்றிவிட்டு
நான் இடம் பெயர்ந்தேன் கேள்விகளோடு..
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment