Friday, 9 June 2017

துளியாய்

காற்றை பிடித்து வைத்துத் திரிகிறான்
வாங்குவதற்குதான் ஆளில்லை
திருவிழாவில் பலூன் வியாபாரி!

                 0 0 0

கடவுள் ஊர்வலம் வருகிறார் 
தனவந்தர்களின் தாம்புல வீதியில் 
அடித்துவிரட்டுங்கள் பிச்சைக்காரர்களை 
அதோ 
அவர்களோடுதான் ஓடுகிறார் கடவுள்! 

                   0 0 0

இதுவும் கடந்து போகும்
என்றுச் சொன்னவன்
இதோ 
நம்மை கடந்துப் போகிறான்!

                     0 0 0

மெளனத்தைக் 
கலைத்துவிட்டுச் செல்லும் பறவை 
சொல்லிவிட்டுப் போகிறது...
"போய் 
உங்கள் வேலையைப் பாருங்கள்!

                       0 0 0

வசதியுள்ளவன் மறந்துவிடுகிறான்!
இல்லாதவன் 
தேடிக்கொண்டயிருக்கின்றான்
வாழ்க்கையை!

                         0 0 0

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts