Saturday, 17 June 2017

துளிகள்

கதைச் சொல்லிகள் 
காத்துக் கிடக்கிறார்கள் 
முதியோர் இல்லத்தில்!

              000

சோதிடக்காரன் மகள் 
சாபம் விடுகிறாள் 
செவ்வாய் தோசம்!

               000

Image result for துளி

சில்லறைக் காசுகளை 
எண்ணிப்பார்க்கிறாள்
வட்டமுகப் பொட்டுக்காரி
நிலா!
                000

சில்லரைக் காசுகளை 
எண்ணியப்பிறகுதான்
நம்பிக்கை வந்தது பூசாரிக்கு,
கடவுள் இருக்கிறார்!                                                   

                000

யாரிந்த ஓட்டைக் கல்லில்
தோசை வார்த்தது...
வட்ட நிலா!

                      000

அவளைத் தொட்டுப் பார்த்து
கீழே விழுந்தது;
ஏமாற்றத்துடன்..மழைத் துளி!

                 000

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts