Friday, 16 June 2017

புரிதல்

Image result for deep writter painting

நானொரு செய்தியை சொல்லப் போகிறேன், 
அந்தச் செய்தி சிறுகதையாகும் போதில் 
களைப்புத் தரலாம்...கவிதையாக்குகிறேன்... 
கவிதையின் வடிவம் மாறுகிறது... 
மனிதர்களைவிட இதுவொன்றும் மோசமில்லை... 
இது தேடப் போவதும் மோட்சமில்லை.. 
புரிதல். அவ்வளவு மட்டும்தான். 
துன்பவியலில் துவண்டு கிடக்கிறது மகிழ்ச்சி .. 
யார் அதை உற்சாகபடுத்தியெழுப்புவது ? 
கவிஞன் எழுப்புகிறான்... 
மகிழ்ச்சியை மனதிற்குள் பூட்டி வைத்திருந்தால் 
தூங்காமல் என்ன செய்யும் ? 
அவன் வார்த்தைகள்தான் எழுப்புகின்றன, 
அப்போதுதானே துன்பம் தூங்கப் போகும் ! 
வடிவங்களை மட்டுமே பார்க்காதீர்கள், 
படிமங்களில் உட்கார்ந்திருக்கிறது, 
வாழ்க்கையின் அருமையான தருணங்கள் !

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts