Sunday, 18 June 2017

பயங்கரக் கனவு


Related image
கனவுகள் என்னை
அடிக்கடி தட்டி எழுப்பி
உட்கார வைத்து விடுகிறது

பேய்கள் சிரிப்பதும்,
எருமை மாடுகள் 
விரட்டுவதும்...
பழம் கனவுகளாக
மாறிப் போயின

என் கனவுகளை
நீங்கள் கண்டால்...
நிச்சயம் தூங்கமாட்டீர்கள்

காந்தியின் கைகளில்
வீச்சரிவாள்,
இரத்தம் சொட்டச் சொட்ட;
அவர் காலின் கீழே
மதவாதிகள் 
மண்டைகள் பிளந்து...

புத்தரின் பற்களில்
இரத்தக் கறை...
கைகளின் கூரிய நகங்கள்..
பிட்சுகளின் 
நெஞ்சினைப் பிளந்து கொண்டு

கில்லட்டின் எந்திரத்தில்
அமெரிக்க அதிபரின் தலை
அப்பாவி நாடுகளின் கைகளில்
அதன் கயிற்றுப் பிடி....

கழுத்தறுந்த பிணங்கள்
உயிர் பெற்றெழுந்து
அறுத்தவன் கழுத்தை
கொடூரமாய்  அறுத்துக் கொண்டு...

பாலஸ்தீன
குழந்தைகளெல்லாம்
நெதன் யாஹூ தலையை
பந்தாடிக் கொண்டு...

ஒவ்வொரு வீடுகளிலும்
திருஷ்டி பொம்மைகளாக
தீவிரவாதிகளின் தலைகள்...

நீங்களும்
இந்தக் கனவைக் கண்டு
சற்று
நன்றாக தூங்கிப் பாருங்கள்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts