
ஜக்காத்தின் வரியென்று
ஏகன் வகுத்துத் தந்த
மார்கம்தான் சொல்லுது!
தேவைக்கு மீறிய
நகைகளும் உண்டென்றால்
அவ் வரியும் கணக்கிட்டு
ஏழைக்கே கொண்டு சேரும்!
வசதியாய் வாழத்தான்
ஒரு வீடு போதுமே... !
ஒன்றுக்கும் மேலென்றால்
அதற்கும்தான் கணக்கிட்டு
கடமையை நிறைவேற்று!
உறவுக்கும் ஈயாத
நிலைச் சூழ்ந்து வாழாதே!
அடுத்தவன் பசித்திருக்க
ஆகாரம் நீ உண்ணாதே!
பசித்தவன் நீயும்தான்
பாழ் ஏழைக் கண்டுவிட்டால்
கை நீட்டிக் கேட்கும் முன்னே
கடமையைச் செய்துவிடு!
சேர்த்து வைத்த அத்தனையும்
சேற்று வெள்ளம்
கொண்டு சென்றால்...
என்னதான் செய்திடுவாய்?
நெருப்புக்கும் இரையானால்
நீயுமா விழுந்துச் சாவாய்!
புரிந்தவன் பாதையில்தான்
புண்ணியங்கள் பூத்துக் குலுங்கும்
மருண்டவன் பாதம் கூட
மகஷரில் நடு நடுங்கும்!
தானமென்றச் சொல் கூட
தர்மத்திற்கே இழுக்குதான்!
இடது கைத் தடுக்கும் முன்னே
வலது கையால்
ஜக்காத்தை நீ கொடுத்து விடு!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment