Wednesday, 7 June 2017

அவிழ்த்துவிடு..

Image result for war i am ready - morden painting

உன் வார்த்தைகளை 
போர்வை போர்த்தித் 
தூங்க வைத்துவிட்டு 
என் வார்த்தைகளை மட்டும் 
தோரணம் கட்டி 
தொங்க விட்டிருக்கிறாய், 
மனதைச் சிதைத்த வார்த்தைகளை 
உடனே அவிழ்த்துவிடு, 
வார்த்தைகளை 
கூர்மைத் தீட்டி வைத்திருக்கிறேன், 
மௌனம் குலைத்த வார்த்தைகளை 
மௌனமாக 
எப்படிக் கடந்து போவது ? 
என் மொழியின் மௌனம் 
உன் மொழியின் ஆதிக்கமென 
நினைத்துவிட்டாய், 
சுழன்றடிக்கும் 
சூறாவளிக்கு முன்பாக 
ஒத்திகைப் 
பார்த்துக் கொண்டிருக்கிறது 
என் வார்த்தைகள், 
முடிந்தால் காப்பாற்றிக் கொள் 
உன் வார்த்தைகளை... 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts