
காற்றின் வெளியிடைப் பேசி
களிப்புறுகிறேன்,
மாற்றமில்லா மௌனம்
என் மனதிற்குள் ஆதிக்கம்,
தோற்றமிதுவெனச் சொல்லுமே
பூக்களெல்லாம்
வாசம் மட்டும் தன்னை வீசிவிட்டு,
காணும் காட்சியாவும் நீயடி,
கண்களுக்குள்ளும்
மாட்சிமை ஆனதுவாய்,
சூட்சமம் ஒன்று சொல்கிறேன்
கேளடி,
காற்றின் மொழிதான்
காதலென்பேன்,
காற்றின் இயைபுதான்
காமம் என்பேன்,
காற்றினிடைதான் களிப்பும் என்பேன்
காற்றினிடைதான் தூதும் என்பேன்
காற்றின் வாசம் மறந்து போனால்
காதல்சுவாசம் நின்று போகும்
காதல்சுவாசம் நின்று போனால்
பூமி இங்கு எதற்கு வாழும் ?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment