
வெங்காயமென்பது
காய்கறி யொன்றின்
பெயராக இருக்கலாம்!
அல்லது
என் அத்தம்மாவின் பெயராகவும்
இருக்கலாம்!
மருத்துவ மனை நுழைவுச் சீட்டில்
தன் பெயரை
அவள் அப்படிதான் பதிவுச் செய்கிறாள்!
சீட்டைத் தொலைத்துவிட்டு
மறு நாள் வந்தவள்
சின்ன வெங்காயமென்று
பதிவுச் செய்தாள் !
நம்ப மறுத்த எழுத்தாணியிடம்
நேற்று வந்தது யென் அக்கா யென்கிறாள்!
அவனால் சிரிக்கதான் முடிகிறது!
பெயரிலென்ன வாழுதென்று
பொத்தாம் பொதுவாய்
தத்துவம் சொல்ல
அவளுக்கு மட்டும்தான் தெரிகிறது!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment