அவன் அப்படித்தான் நுழைந்தான்,
ஒட்டகம் போல் மெல்லக் கழுத்தை நீட்டி
கூடாரத்திற்குள் எட்டிப் பார்த்தான்,
பாவன் என்று
முகத்தைத் தடவிக் கொடுத்தோம்,
நாக்கால் நக்கினான்,
அற்பச் சுகத்தில் அயர்ந்துவிட்டோம்
எழுந்து பார்த்தால்
நாங்கள்
வெயிலில் நனைந்து கொண்டிருக்கிறோம்
அவன் கூடாரத்திற்குள்
உறங்கிக் கொண்டிருக்கிறான்..
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment