
ஞானத்திற்கும் பெரு மாசையாய்
ஞானேந்திரம் அடக்க முயன்று
ஞெகிழம் கள்ளம்கொள் கொல்லனாய்
ஞாழலில் அகப்பட்டுத் தவிக்கும்
ஞமலியின் ஞானக் கிறுக்கனாய்
ஞாத்தலில்லாதுத் திரியும் மனதை
ஞாஞ்சில் கொண்டும் உழுதிடாது
ஞாங்கே உடன் வரும் ஆசையுடன்
ஞாட்பும் செய்ய முடியாமலும்
ஞாயிலின் வழி அம்பெய்த முடியாமல்
ஞஞ்ஞையாய் ஞமரும் அம் மனதை
ஞாயிறும் கலைக்குமோ
ஞானப் பெண்ணே! மலர்களின் வாசத்தில்
ஞிமிறு போல் சுழன்றெழும்
ஞீங்கார யோசைதான்
ஞானத்தி னாசையும் ஞானப் பெண்ணே!
- மு.முகமது பாட்சா
அறிக :
ஞானம் - அறிவு
ஞானேந்திரம் - ஐம்புலன்கள்
ஞெகிழம் - காற் சிலம்பு
ஞாழல் - ஒருவகை கொடி
ஞமலி - நாய்
ஞாத்தல் - கட்டுதல்
ஞாஞ்சில் - கலப்பை
ஞாங்கே - அங்கே
ஞாட்பு - போர்
ஞாயில் - உறுப்பு
ஞஞ்சை - மயக்கம்
ஞாயிறு - கதிரவன்
ஞிமிறு - தேனீ
*** *** *** *** *** ***
No comments:
Post a Comment