காடொன்று பற்றியெரிகிறது
மழையை வீசி அணைக்கிறேன்,
குளிர்ந்த காற்றில் உறைந்து விடுகிறது காடு
வெப்பக் காற்றை இடம் மாற்றுகிறேன்
வியர்வையில் நனைந்த காடு
நறும் நதியாக வடிவெடுக்கிறது,
நீந்துகிறேன் நீந்துகிறேன்ன்ன்ன்
நதியும் நீந்துகிறது....
கடலில் கலந்த நதி மௌனம் ஸ்தாபித்து
பெரும் அலைகளை எழுப்பி
கரையினை வருடுகிறது
கடலோரம் நின்று கால்களை நனைக்கிறோம்
நானும், அவளும் - அவளும், நானும்
நானும் மழையும் அவளும் காடும்
நானும் கடலும் அவளும் நதியும்
முத்தமிட்ட காடு
கடலின் மடியில்தான் இப்போது உறங்குகிறது
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment