Thursday, 8 June 2017

கனவின் காதலி

Image may contain: one or more people and outdoor

என் கனவுக்குள் திரும்பிச் செல்கிறேன் 
அங்குதான் அவளை விட்டுவிட்டு வந்தேன், 
என் கனவினுள் நுழைந்ததால் 
கனவுகளின் பாதைகளுக்குள்ளேயே 
அவள் இன்னமும் சுற்றிக் கொண்டிருக்கலாம், 
என் மீது விழுந்த மழைத் துளிகள் 
அவளின் கண்ணீர்த் துளிகளாகவும் இருக்கலாம் 
வானத்துக் குமுறல்களில் மறைவோசையில் 
அவளின் விம்மலோசையினைக் கேட்டேன் 
அவள் ஜனனத்தின் மாயம் 
என்னைப் போலவே அவளுக்கும் தெரியாது 
அவள் மந்திரப் புன்னகையின் 
புகை வெளி மயங்கத்திலிருந்தவனை 
எழுப்பியவர்கள் சபிக்கப் படுவார்களாக 
அவளுறங்கும் போது என் மடியைத்தான் 
அவளின் தலைக்குக் கொடுத்துவிட்டு வந்தேன்... 
அஃது அவளின் 
மரணத்தின் மடியாக மரணித்துவிடக் கூடாது... 
அவளைத் தேடச் சொல்லிக் கேட்கவும் முடியாது.... 
ஏனென்றால், நீங்கள் என் கனவிற்குள் 
எப்போதுமே நுழைந்தது கிடையாது...

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts