Tuesday, 20 June 2017

மிதிலை சிறையில் சீதை

Image may contain: one or more people and closeup

கடந்து போக 
காத்திருக்கிறாள் சீதை! 
ஜனகனின் வீட்டில் 
சோதிடக்காரன் 
முகாமிட்டிருக்கிறான்! 
திரியம்பகன் வில்லொடிக்க 
இராமனுக்கு நேரமில்லை 
வரதட்சனைக் கேட்டு 
கைகேயி அகற்றிவிட்டாளாம்! 
மிதிலையின் அரண்மனையில் 
சிறையிருக்கிறாள் சீதை 
முதிர் கன்னிகையாக! 
இராவணனாக இருந்தாலும் 
பரவாயில்லை... 
குணவானாக இருந்தால் போதும்! 
கடந்து போக 
காத்திருக்கிறாள் சீதை ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts