
சங்கபுட்பியின் மலர்களின்
வெண்மணித் துகள்களில்
ஒட்டிப் புரண்ட வங்கன்
வேட்டுவாளித் தன்னிறம்
வெண்மையெனப் பறைச்சாற்றி
பறந்துத் திரிந்தப் பொழுதில்
மழைத்தலின் காற்றும்
கரைத் தொழுக்கிச் சுயம் காட்டிப்
போகும் சூட்சமத் தெளிதலில்
வேசம் கட்டிய ராசாவிற்கும்
காத்திருக்கும்
ஓரு நாள் கடும் மழை!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment