Sunday, 4 June 2017

மீன் சிக்குமா?


Image result for fish catcher of old sufi- painting

கட்டாந்தரையில்
வலைவிரித்துக் கொண்டிருந்தான்
தாடிக்கார கிழவன்,
உலர்த்துகிறாயா? எனக் கேட்டேன்
சிரித்துவிட்டு
மீன் பிடிப்பதாகச் சொன்னான்...
சுவாரசியமானவன் !
கிடைத்ததாவெனக் கேட்டேன்
சிரித்தவன்,  கிடைத்தாலும்
விற்பனைக்கு அல்லயென்றான்
அத்துணை மீன்களும்
உமக்கா என்றேன்
இல்லை கடலுக்கு என்றான்...
புரியவில்லையென்றேன்
நீயென்ன இந்தப் பூமிக்கா? 
என்று கேட்டுவிட்டு 
மீண்டும் வலையை வீசுகிறான் 
நான் சிக்கிக் கொண்டதாக உணர்கிறேன்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts