அப்பாவை மட்டுமே
அப்பாவாக பார்க்கும் போது
அப்பாவாகத் தெரிகிறார்!
நண்பனாய் பார்க்கும் போது
நண்பனாகவே மாறிப் போகிறார்!
அப்பாக்களால் மட்டுமே
எத்தனை தடவைகள்;
கேள்விகள் கேட்டாலும்
சளைக்காமல்
பதில் சொல்ல முடிகிறது!
அப்பாவின்
கை விரல்களுக்குள்
எனது விரல்கள்
பதுங்கும் போது
பாதுகாப்பை உணர முடிகிறது!
அம்மாக்களை
தூக்கிவைத்து
கொண்டாடுவது போல்...
அப்பாக்களை; நாம்
செய்வதில்லை!-ஆனாலும்
அப்பாக்களுக்கான
ஓரிடம்
ஆலயமாகத்தான் இருக்கிறது!
அப்பாகளின் கண்டிப்பை
நாம்; நமது பிள்ளைகளைக்
கண்டிக்கும் போது
நியாயம் உணரமுடிகிறது!
அப்பாக்களால் மட்டுமே
மருமகள்களுக்கு; நல்ல
மாமனாராக இருக்க முடிகிறது!
தாத்தாக்களாக
மாறிப் போன அப்பாவை
நமது பிள்ளைகள்
செல்லமாக அடிக்கும் போதும்,
நமக்கு
வலிக்கத்தான் செய்கிறது!
அப்பா அப்பாதான்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment