Friday, 9 June 2017

கவியானவன்

Image result for பாரதி வரை ஓவியம்

பாரதியின் கோபத்தை
சிறை வைத்துவிட்டு
புறப்பட்டான் புதுக்கவிஞன்!

அரசியலை விமர்சிக்க
அருகதையில்லா......
அநாதையாகிப் போனான்!

ஆதாயம் இருக்குமாவென
அதிலும் வழித் தேடுகிறான்!

காதலை மட்டுமே
எழுதிவிட்டு
நானும் கவிஞனென்றால்;
மதுவின் 
மயக்கத்தில் வீழ்ந்த
அடிமைதானே... நீயும் ?

இனியாவது

கவிதைகளுக்கு
புது இரத்தம் பாய்ச்சுங்கள்;
சீரழியும் நாடாவது
உம்மை
சீர் தூக்கிப் பார்க்கட்டும்...

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts