
மனசுக்குள் ளுருளும்
திக்ருவின் நேசம்!
பசித்த வயிறுகளின்
நேசித்த மெளனம்!
பறவைகள் கூடடையும்
மெளனிக்கும் சப்தம்!
சஜ்ஜிதாவில் சாயும்
கதிரொளியின் தொழுகை!
இப்தாருக்குத் தயாராகும்
இனிய நல் லுணவு!
பள்ளிகளின் தூய்மையில்
நோன்புக் கஞ்சி வாசம்!
சற்று நேரத்தில் உயரும்
பாங்கின் ஓசை!
பேரிட்சையோடு காத்திருக்கும்
நோன்பின் திறப்பு!
நோப்பவரே நுகரும்
பிர்தவ்ஸின் சுவர்கம்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment