Thursday, 15 June 2017

ஜக்காத்து

Image may contain: 1 person

புறாக்களின் கூட்டடைவை 
சொல்லிக் கொடுத்தது 
யாராக இருக்க முடியும்! 
செடிகளின் சுவாசிப்பில் 
மனிதர்களின் சுவாசம்... 
அற்புதங்களின் சேகரத்தில் 
அதிசயம் மனிதன்! 
வெளிச்சங்களை விரட்டிவிட்டா 
இருட்டுகள் ஆட்சிச் செய்ய முடியும் ?
நிலவுகளின் பாதைகளில் 
நட்சத்திரங்களா தடைக் கற்கள்! 
முடவனோ..முட்டாளோ... 
பாதைகளின் பயணங்கள் 
பயணித்தே யாக வேண்டும்! 
தொழுகைகளும் திக்ருக்களும் 
நம்மளவில்தான் சுவனமாகும்! 
ஜக்காத்தும் சதக்காவும் 
இறைவனின் நேசமாகும்! 
சாயைகளின் சாய்வுகளில்தான் 
மறைந்துவாழும் மனித யினம்! 
போகும் போது ஒன்றுமில்லை 
புறப்படும் முன் கொடுத்திடுவீர்! 
ஆம்! 
போகும் போது ஒன்றுமில்லை 
புறப்படும் முன் கொடுத்திடுவீர்! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts