Wednesday, 14 June 2017

இல்லாத ஒன்று


இல்லாத ஒன்றுக்குள் 
ஏதோவொன்று இருக்கத்தான் செய்கிறது, 
காட்சிப் பிழைகளில் 
கடந்து போகிறான் மனிதன், 
ஆசைக் குளியல் 
அவனுக்கு அதிகமாகப் பிடித்திருக்கிறது, 
இருக்கின்ற உடலோடு வந்தவன் 
இல்லாத ஒன்றாகத்தான் 
முடிவுரையை எழுதுகிறான், 

Related image

காதலொன்று மட்டும் இல்லையென்றால் 

அவன் கடந்து போகும் பாதை 
முட்களால்தான் நிரம்பியிருக்கும், 
ஞானம் என்பதும் அவன் போடும் வேசம், 
காதல் மட்டும் ஞானமில்லாமல் 
வேறு என்னவாக இருக்க முடியும்? 
மதங்களுக்குள் நுழைந்து 
பெரும் மாச்சரியம் பண்ணுகின்றான், 
கத்தியைத் தீட்டிக் கொண்டே 
தன் கடவுளையே வெட்டுகின்றான், 
பிணங்கள்தானே வரலாற்றை எழுதுகின்றன, 
நாளைய பிணங்கள் 
இன்றைய வரலாறாக இருக்கவே முடியாது, 
இல்லாத ஒன்றுக்குள் 
ஏதோவொன்று இருக்கத்தான் செய்யும்... 
இருப்பதாக நினைப்பதெல்லாம் கூட 
இல்லாத ஒன்றாகவும் இருக்கும்... 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts