
கவிதையை யெழுதிப் படித்துவிட்டு
தூக்கி யெறிகிறேன்!
ஒரு பறவை - தன்
நகங்களால் கீறிவிட்டுப் பறக்கிறது!
முகமில்லாத தேசத்தில்
மூச்சுக் கவிதைகளுக் கிடமில்லையாம்!
செத்தப் பாம்பொன்று
உயிர் பெற்றுப் போகும் போது
அதைக் கடித்துப் போட்ட
பூனையொன்றுப் பதுங்கிப் போகிறது!
சாயைகளும் சில நேரங்களில்
சாத்திரங்கள் சமைக்கக் கூடும்!
சாத்தான் வேதமோதிக் கொண்டிருப்பான்...
பூணுல் கயிற்றில் புலி நகங்கள்!
அங்குதான் - அந்த
முகமில்லாத மனிதர்களும் வேதம் படிக்கிறார்கள்!
எழுத்தாணிகள் யெழுதிக் களைக்க
உதிரம் நிரம்பிய மைக் கூடுகள்!
அதிலெழுதும்
கவிதைகளும் ரசனைக் குட்பட்டது!
கவிதையை யெழுதிப் படித்துவிட்டு
தூக்கி யெறிகிறேன்!
ஒரு பறவை - தன்
நகங்களால் கீறிவிட்டுப் பறக்கிறது!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment