Sunday, 11 June 2017

என்னச் சொல்ல

Image result for குடிகாரன் மனைவி painting

அடுப்பிலே ஆவியுமில்ல,
சட்டியிலே சோறும் இல்ல,
குடிச்சிட்டு வந்த புருசன்
அடிச்ச அடி ஆறவேயில்ல!
பாழாய் போன மருந்து வாங்க
கையிலத்தான் காசுமில்ல,
மாமியாரும் துணைக்கு இல்ல..
உறவுன்னு யாருமில்லை 
கும்பிடும் ஆண்டவனும்தான்
 நான் செத்துத் தொலைய 
நாள் குறிக்கல....

கடவுளை தேடிப் பார்த்தா

ஊத்திக் கொடுக்கும் ஓனரு வீட்டு
பணத்துக்குத்தான் பாதுகாப்பா நின்னு...
 என்னமா சிரிக்கிறான்... 
  என்னை பார்த்து  ஏளனமாச் சிரிக்கிறான்,

என் பொழப்பை இனியும்  நான்
எங்கதான் போய்ச் சொல்ல...

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts