ஆடுகளெல்லாம்
வசீகரனின்
புல்லாங்குழலிசையில்
இலயித்திருந்தன,
துவாரகை யுகத்திற்குள் நுழைந்து
கோபியரின் ஆடைகளைத்
திருடிச் சென்றன,
கன்னிகையரின் அவயங்களை
மேய்ந்து களித்தன,
தகிடதத்த சூதாட்டத்தில்
சூழ்ச்சிகள் செய்து
குருஷேத்திரத்தில்
உதிரம் குடித்துத் தாகம் தீர்ந்தன,
வசீகரன் கண்விழித்தபோது
ஏகலைவன் விரல் செரிக்காமல்
சில ஆடுகள் செத்தும் கிடந்தன ,
புல்லாங்குழல் மட்டும்
இப்போது இசையை மறந்து
தனியாகக் கிடந்தது !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment