Monday, 8 May 2017

என்னைத் தேடி ...

நான் தொலைந்து போனது 
யாருக்குத் தெரியும் ? 
என்னை ஒரு நிழல் 
கடத்திச் சென்றிருக்கலாம், 
என் கோபமே என்னை 
தூக்கி எறிந்திருக்கலாம் 
முந்தானை பிடித்துப் போய் 
முகவரி தொலைத்திருக்கலாம், 
கவிதைகளில் புதைந்து 
வார்த்தைகளைத் 

i catch me - painting க்கான பட முடிவுதேடிக் கொண்டிருக்கலாம், 
அரசியல் காற்றில் 
அடித்துப் போய் இருக்கலாம் 
அல்லது நான்தானா 
நானென்பதே தெரியாமல் 
நானே என்னை 
தேடிக் கொண்டும் இருக்கலாம் 
யாராவது 
என்னைப் பார்த்தால் சொல்லுங்கள் 
நான் இங்குதான் 
தூங்கிக் கொண்டிருப்பேன் 
யாரையாவது 
கனவில் தேடிக் கொண்டே !

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts