வெற்றிகள்
தோல்விகளைத் தின்று விடுகிறது!
தோல்விகள்
வெற்றியின் கீழ் வீழ்ந்து கிடக்கிறது!
வெற்றியாளர்கள்
வெற்றிகளைச் சூடிக் கொள்ளுங்கள்...
அகந்தைகளை
ஆனவம் இல்லாமல் இறக்கி வைத்து விட்டு!
தோல்வியாளர்கள்
சற்றே தூங்கி யெழுங்கள்
தோல்விக்கான காரணங்கள் விளங்கி விடும்!
வெற்றிக் காரர்கள்
தோல்விக்காரர்களை
துச்சமாகப் பார்க்காதீர்கள்...
அவர்களும் வெற்றிக்காகத் தோற்றவர்களே!
தோல்வியில் வீழ்ந்தவர்கள்
வெற்றிச் சூடியவர்களை ஏசாதீர்கள்...
தவறான ஏதோ ஒன்றில்தான் வீழ்ந்து கிடக்கிறோம்!
வெற்றிகள் தோல்விகளிடம் கைக் குலுக்குங்கள்
அவர்களால்தான் வெற்றிப் பெற்றீர்கள்!
தோல்விகள் வெற்றிகளை
கட்டித் தழுவி முத்தமிடுங்கள்...
வெற்றிக்கான இரகசியங்கள் எளிதில் புரிந்துவிடும்!
எதுவும் செய்யாமல் ஓய்வெடுப்பவர்கள்
நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளட்டும்...
கனத்தத் துயரங்களின்
கட்டிலில் நிம்மதியிழந்துப் படுத்துக் கொண்டு!
-மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment