Wednesday, 17 May 2017

நீதி தேவதை

நீதி தேவதை- தன்
கண் கட்டை அவிழ்த்து
பார்த்த போது.....
காணவில்லை
நீதித் தராசை!

நீதி தேவதை க்கான பட முடிவு

குற்றவாளிக் கூண்டில்
நீதி மான்கள்!

சட்ட புத்தகங்களை
அரசியல் பூச்சிகள்...
அரித்துக் கொண்டிருந்தன!

நீதி மேடையில்
சதுரங்கக் காய்களை...
பணக் கட்டுகள்
நகர்த்திக் கொண்டிருந்தன!

ஆனாலும்...
நீதி தேவதை
கலங்கவேயில்லை!

நீதி தேவதைக்கு
நிச்சயம் தெரியும்,
சட்ட புத்தகங்களை
அரித்துக் கொண்டிருப்பது
அரசியல் பூச்சிகள்...
செரிமான மில்லாமல்
சீக்கிரமே செத்துப் போகுமென்று!

பணக் கட்டுகள்
காய்களை வேண்டுமானால்
நகர்த்தலாம்...
தன்னை - ஒரு போதும்
நகர்த்த முடியா தென்று!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts